மகாராஷ்டிர மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை 3 பேரை கைது செய்தது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மாநில சட்டப்பேரவையில் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன் படி மாநில சட்டசபை வளாகத்திற்குள் மை பேனா கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டன. மை பேனாக்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.