மணிப்பூரில் கடந்த ஆண்டில் பழங்குடியின மக்களான குக்கி இன மக்களும், மெய்தி இன மக்களும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் முடிவுக்கு வந்தது போன்று இருக்கும் ஆனால் திடீரென மீண்டும் கலவரம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) முதல் முறையாக மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.