நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், வைரஸ் மூலம் பரவும் பொதுவான நோய்களுக்கு, மருந்துகளை உண்பதற்கு பதிலாக, நெபுலைசர் மூலமாக, ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசித்தால், அது சிறந்த மாற்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இவரது இந்த பேச்சு, மருத்துவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கிய சமந்தாவுக்கு, தற்போது மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, பிரபல பாலிவுட் ஹீரோவான ஷாருக்கான் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், இவ்வளவு பெரிய ஆப்புக்கு பிறகு, இப்படியொரு சூப்-ஆ என்று, கலாய்த்து வருகின்றனர்.