தொண்டர்களுக்கு மது விருந்து வைத்த பாஜக எம்.பி. ..வீடியோ வெளியானதால் சர்ச்சை

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர். தனது வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக தொண்டர்களுக்கு அசைவ உணவுடன் மது விருந்து வைத்துள்ளார்.

மது பாட்டில்களை வாங்குவதற்காக பாஜக தொண்டர்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றுள்ளனர். இந்த வீடியோ இணயத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருந்து நடந்தப்போவதாக போலீசிடம் அனுமதி வாங்கிய சுதாகர், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விநியோகித்துள்ளார். பாஜக எம்.பி யின் செயலுக்கு அம்மாநில துணை முதலவர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News