தொழில்நுட்பம் தொடர்பான வீடியோக்களை, YouTube-ல் வெளியிட்டு வருபவர் தான் A2D நந்தா. இவர், தனது நண்பரின் செல்போனுக்கு பேட்டரி வாங்குவதற்காக, சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு சென்றுள்ளார்.
பேட்டரி வாங்கிவிட்டு, அங்கிருந்து சென்றபோது, மது அருந்திய இளைஞர்கள் சிலர், நந்தாவை வழிமறித்துள்ளனர். மேலும், அவருக்கு மிரட்டல் விடுத்த அந்த கும்பல், நந்தாவிடம் இருந்த கேமராவையும் பறித்துக் கொண்டனர்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவர், தனக்கு தெரிந்தவரின் உதவியை நாடி, மீண்டும் கேமராவை பெற்றுள்ளார்.
இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவியதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
பின்னர், இந்த சம்பவம், காவல்துறையின் கவனத்திற்கு சென்றதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை, அவர்கள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.