வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் அமைந்துள்ள மடத்துப்பட்டி தெருவில் நாச்சியார் என்ற மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஈடுபாடுகளில் சிக்கி மூதாட்டி பலியானார்.

தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News