“குற்றவாளியை பாதுகாக்க பார்க்கிறார்கள்” – மீன் வியாபாரி கண்ணீர் பேட்டி! நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மீன் வியாபாரம் செய்து வருபவர் பிரதீப் நக்வா. இவரும், இவரது மனைவி காவேரி நக்வாவும், மார்கெட்டுக்கு மீன் வாங்க சென்றுள்ளனர்.

மீனை வாங்கிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பி.எம்.டபள்யூ கார், வேகமாக மோதியது. இந்த விபத்தில், பிரதீப் நக்வா, சாலையில் தூக்கிவீசப்பட்டார்.

ஆனால், காவேரி நக்வா, காரின் பின்பக்கமாக சிக்கிக் கொண்டு, நீண்ட தூரத்திற்கு, இழுத்து செல்லப்பட்டுள்ளார். மனைவி இழுத்து செல்லப்படுவதை அறிந்த பிரதீப், காரின் பின்னால், அரை கிலோ மீட்டருக்கு ஓடியுள்ளார்.

இருப்பினும், காரை இயக்கிய நபர், வண்டியை நிறுத்தவில்லை. இதையடுத்து,பிரதீப் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதன்பிறகு, பந்தரா பகுதியில், காவேரியின் சடலம் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தற்போது BMW காரை இயக்கிய மிகிர் ஷா என்ற 24 வயது இளைஞரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இளைஞரின் தந்தையும், சிவசேனா கட்சியின் துணை தலைவருமான ராஜேஷ் ஷாவும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பிரதீப் நக்வா, குற்றவாளி பாதுகாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் செல்வாக்கு மிகுந்த நபரின் மகன். நான் ஒரு ஏழை. யாரும் ஏழையை பற்றி கவலைப்பட மாட்டார்கள்” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, இது ஒரு துரதிர்ஷ்ட வசமான சம்பவம் என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News