தனுஷின் ராயன் படத்தை சென்சார் அதிகாரிகள் நேற்று பார்த்தனர். அப்போது, ரத்தம் தெறிக்கும் வகையிலான காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், சில காட்சிகளை நீக்கினால், U/A சான்றிதழ் தருகிறோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், “நான் படத்தை முழுவதுமாக பார்க்கிறேன். அதன்பின் முடிவு செய்துக் கொள்ளலாம்” என்று கூறினாராம்.
பின்னர், படத்தை பார்த்துவிட்டு, “படம் அருமையாக உள்ளது. எந்த காட்சியையும் நீக்க வேண்டாம். A சான்றிதழே பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறினாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.