திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு : வெளியான ஷாக்கிங் தகவல்

திரிபுரா மாநிலத்தில் 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பால் 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் எச்.ஐ.வி பரவியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News