ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ (ASR) என்ற மாவட்டத்திலுள்ள கிஞ்சுரு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பண்டனா. இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு சகேனி பர்வத்தமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தற்போது வரை அவர்களுக்கு குழந்தையில்லை.
இதையடுத்து 2005ம் ஆண்டில் சகேனி அப்பலம்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2007ம் ஆண்டு குழந்தை பிறந்திருக்கிறது. இதன்பின் பண்டனா தன் 2 மனைவிகள், ஒரு மகனுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், அடுத்த குழந்தைக்கு தயாரான பண்டனா தனது இரு மனைவிகளின் சம்மதத்துடன் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இந்த மூன்றாவது திருமணத்துக்கு, முதல் இரு மனைவிகளே ஏற்பாடுகளை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது மூன்று மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில் வாழ்வதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.