ஹைதராபாத்தின் ஒரு பகுதியான சங்காரெட்டி மாவட்டம் சுல்தான்பூரில் ஜேஎன்டி யூ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்கி உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு நேற்று இரவு சமைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சட்னி இருந்த பக்கெட்டில் குதித்த எலி ஒன்று அந்த சட்னியை ருசித்துக்கொண்டே நீந்திய காட்சியை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் மாணவ மாணவியர்களுக்கு பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.