நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விழுத்துள்ளது. இதில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.