திருவள்ளுா் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அக்கரபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி மதன்குமார் தம்பதி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தேன்மொழி பூரிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மதன்குமார் ஊத்துக்கோட்டை அருகே கூலி வேலைபார்த்து வருகிறார். மகன்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12 மற்றும் 8ம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் பணிக்கு சென்று உள்ளனர். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ முழுவதும் தீயில் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகன்கள் இருவரும் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அனைத்தனர். மேலும் பீரோவில் உள்ள 20 சவரன் நகை, மற்றும் 20,000 ரொக்கம், கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் அரசு ஊழியரின் வீட்டின் நடந்த கொள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.