நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் தோல்வி..!!

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரசந்தா 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார். ஏற்கனவே 4 முறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி நிலையில் இன்று 5 வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News