தோனியை கடுப்பாக்கிய ஸ்ரீசாந்த்.. புத்தகத்தில் கூறியுள்ள அஸ்வின்..

இந்தியாவின் கிரிக்கெட் அணி கேப்டன்களில் மிகவும் முக்கியமானவர் எம்.எஸ்.தோனி. இவர், இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதற்காக மட்டும் இவரை சிறப்பான கேப்டன் என்று கூறுவதில்லை.

அதற்கு மேலாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சக போட்டியாளர்களிடம், ஆக்ரோஷமாக நடந்துக் கொள்ள மாட்டார். எத்தகைய சூழ்நிலை வந்தாலும், நிதானமாகவே இருப்பார்.

ஆனால், இப்படிப்பட்ட எம்.எஸ்.தோனியே, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின்போது, கடும் கோபம் அடைந்திருக்கிறாராம். இந்த தகவலை, தனது சுயசரிதை புத்தகத்தில், பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

அதாவது, கடந்த 2011-ஆம் ஆண்டு அன்று, தென் ஆப்ரிக்கா அணியுடன், கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், அஸ்வினும், ஸ்ரீசாந்தும், Playing 11-ல் இடம்பெறவில்லை. இதில், இடைவேளையின்போது, தண்ணீர் கொண்டு வந்து தரும் பொறுப்பு, அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது, தண்ணீர் பிரேக்கின்போது, மற்ற ரிசர்வ் போட்டியாளர்களுடன், ஸ்ரீ சாந்த் அமரவில்லை என்பதை, தோனிக்கு அறிந்திருக்கிறார். அப்போது, அஸ்வினிடம், ஸ்ரீசாந்த் எங்கே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு, அவர், உடை மாற்றும் அறையில் இருக்கிறார் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

இதனால், கடுப்பான தோனி, மற்ற ரிசர்வ் போட்டியாளர்களுடன் அமர வேண்டும் என்று ஸ்ரீசாந்திடம் கூறு,என்று அஸ்வினிடம் கூறியுள்ளார். இவரும், ஸ்ரீசாந்திடம் இந்த தகவலை கூறியுள்ளார்.

அதற்கு, “நீ போ நான் அப்புறம் வரேன்” என்று கூறியுள்ளார் அவர். இந்த தகவல், மீண்டும் தோனியின் காதுக்கு கிடைத்த பிறகு, செம டென்ஷன் ஆன அவர், “ஸ்ரீசாந்துக்கு டிக்கெட் போட்டு, இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள். அவருக்கு அணியுடன் இங்கு இருக்க விருப்பம் இல்லை” என்று, அப்போதைய அணியின் மேனேஜரிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு, தான் ஸ்ரீசாந்த் மற்ற போட்bயாளர்களுடன் கலந்துக் கொண்டாராம். அஸ்வின் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இந்த சம்பவம், தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News