2023-ஆம் ஆண்டுக்கான Batch-ஐ சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் பூஜா கேட்கர். இவர் தனது அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தி, தனக்கென தனி கார், தனியான வீடு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான, இவரது வாட்ஸ்அப் சேட்கள், சமீபத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. மேலும், OBC இடஒதுக்கீட்டை, தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும், இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கரின் தந்தை, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “என்னுடைய மகள் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு பெண், அமருவதற்கு இடம் வேண்டும் என்று கேட்பது தவறா?” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த விஷயம், நீதிமன்றத்தின் விசாரணையின் கீழ் உள்ளது மற்றும் இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு புதிய கமிட்டி ஒரு நியமிக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்புக்கு அனைவரும் காத்திருப்போம்.
இந்த விஷயத்தை யாரே ஒருவர் வேண்டுமென்றே சர்ச்சையாக மாற்றுகிறார் என்பதை மட்டும் தான், தற்போது என்னால் சொல்ல முடியும்” என்று கூறினார்.
இவர் இவ்வாறு பேசியதற்கு, “யார் அந்த நபர்? அவரது பெயர் என்ன? யார் சர்ச்சையை கிளப்புகிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள், செய்தியாளர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது.
ஆனால், அவர் அது அனைத்திற்கும் பதில் சொல்லவில்லை. இதையடுத்து, பூஜா, Creamy layer-ல் சிவில் தேர்வுக்கு விண்ணப்பித்தாரா? அல்லது Non Creamy layer-ஆ என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை கமிட்டி முன் வைப்போம். சட்டரீதியான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நேரத்தில், இதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அனைத்து விதிகளின் படி தான் நடத்தப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் எதுவும் நடத்தப்படவில்லை“ என்று கூறினார்.