ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரான் செக்டார் எல்லைப் பகுதியில் நேற்று (ஜூலை 14) 3 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில் சமீபமாக தீவிரவாதத் தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கதுவா, தோடா, ரியாசி, உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 9 ஆன்மிகபயணிகள், 6 பாதுகாப்புப் படையினர் என 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.