ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டாஸ் பாயும் – கமிஷனர் அருண் திட்டவட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை குன்றத்துார் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 பேரை கைது செய்தனர். இதில் ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இன்று(ஜூலை 15) சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை முழுவதும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News