அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் நாடாளுமன்ற தொகுதியின், காங்கிரஸ் கட்சி எம்.பியும், நாடாளுமன்றத்தின் துணை தலைவருமான கவுரவ் கோகாய், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற அவை, நடுநிலையானதாக இருக்க வேண்டும். கடைசி நாடாளுமன்ற கூட்டத்தின்போது, எங்களது கட்சியின் தலைவர் ராகுல் பேசிய கருத்துக்கள் நீக்கப்பட்டிருந்தது, துரதர்ஷ்டவசமானது.
பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஒட்டுமொத்த இந்து மத சமூகத்துக்கும் பிரதிநிதிகள் கிடையாது என்று ராகுல் காந்தி கூறும்போது, நீங்கள் அதனை பார்த்திருப்பீர்கள்.
அவர் அவ்வாறு கூறி அனைத்தும், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தேதி வரைக்கும், எதற்காக அவை நீக்கப்பட்டது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, பாஜகவில் உள்ள பலர், தவறான தகவல்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “பத்ரிநாத்தில் பாஜகவினருக்கு, மக்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்கட்சி தலைவர் என்பது ஒரு அரசியலமைப்பு பதவி. அவரது வார்த்தைகளின் வலிமை, கண்டிப்பாக நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்” என்று கோகாய் தெரிவித்துள்ளார்.