ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பாதுகாப்பு படைப் பிரிவினர் நேற்று (ஜூலை 15) இரவில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும், அவர்களை விடாமல் ராணுவ வீரர்கள் துரத்தியுள்ளனர். வனப்பகுதிக்குள் தீவிரவாதிகளுடன் என்கவுன்ட்டர் நடந்துள்ளது.
இரவு 9 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்பட 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் ஐவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 வீரர்கள் இன்று காலை உயிரிழந்தனர்.