நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலமுருகன் என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை 16) குடும்ப பிரச்சனை காரணமாக உறவினர்களின் தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொதும்பு பென்னி (19), வில்லா புரம் பரத் (18), சுப்பிரமணியபுரம் கோகுலகண்ணன் (18), நாக இருள்வேள் (17) ஆகிய நான்கு இளைஞர்களும் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.
செல்லூர் பகுதியில் இவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்ய சென்ற போது வைகை ஆற்றுக்குள் குதித்து தப்பி ஓட முயன்ற போது கோகுலகண்ணன், பரத், பென்னி ஆகிய மூவரின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. மூவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவரும் காலில் கட்டுடன் சிகிச்சை பெறும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.