“அப்ப நாங்க யாருடா” – பா.ரஞ்சித்தை மறைமுகமாக தாக்கிய இயக்குநர் மோகன் ஜி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து, நீலம் பண்பாட்டு மையம் சார்பில், நேற்று பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் கலந்துக் கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், சிறப்புரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ரவுடிகள் என்றால், நாங்கள் அனைவரும் ரவுடிகள் தான் என்று கூறினார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைக்கு பின்னால் இருக்கும் அயோக்கியர்களை கைது செய்யும் வரை, நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், “ என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க..

நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவு, இயக்குநர் பா.ரஞ்சித்துக்கான மறைமுகமாக கண்டனம் என்பது, இதன்மூலம் தெரியவந்துள்ளது. இவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், மோகன் ஜி-யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மிகமிக குறைவான அளவிலேயே, அவருக்கு ஆதரவான கமெண்ட்ஸ்கள் வந்துள்ளன.

RELATED ARTICLES

Recent News