கேரள மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்கு, நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றிருந்தார். பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்தபோது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்தியன் 2 திரைப்படம் எப்படி உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி, படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே, அதிக அளவு விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த திரைப்படத்தை, நன்றாக உள்ளது என்று ரஜினி கூறியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பராக இருந்தாலும், ஒரு அளவு வேண்டாமா? என்று நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர்.