நாடாளுமன்றத்தில் (ஜூலை 23) இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் விவரம்;
- மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
- 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
- வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபட்டுத்தத் திட்டம்.
- வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்க கவனம் செலுத்தப்படும்.
- கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்.
கல்வி: மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
- ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பிஹார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும். மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.
- முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.
- நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.
- ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- தொழிலாளர்களுக்கான தங்கும் இடம் வசதி அரசு – தனியார் பங்களிப்பில் உருவாக்கப்படும்.
நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.
- நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
- தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
- 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும்.
- பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli ) திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
- கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.
- பிரதமரின் கிராம சாலை திட்டம் 4-ன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.
- விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
- வரிச் சலுகைகள்: புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது.
- தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
- வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
- வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
- ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
- டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
- அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
- முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.