பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஏராளமான பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதன்படி, எந்தெந்த பொருட்கள் விலை குறைந்துள்ளது என தெரிந்து கொள்வோம்.
மொபைல் போன்கள், மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன்கள், சார்ஜர்களின் விலை குறையும்.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இனி தங்கம் விலை கணிசமான அளவில் குறையும்.
வரி குறைப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளின் விலையும் குறையும்.
சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள் விலையை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.