அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை..நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

பாராளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 92.50-க்கும் கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News