நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில் 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானம் மேலே எழும்ப முயன்றபோது திடீரென சறுக்கி விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனே தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.