பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛ பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டவில்லை என கூறியுள்ளார்.

இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடவில்லை. அங்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

RELATED ARTICLES

Recent News