ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்தவர் மனிஷ் குமார். டெல்லியில் உள்ள நிஹர் விஹர் பகுதியை சேர்ந்தவர் சத்யேந்திரா.
இவர்கள் இரண்டு பேரும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், பல சைபர் க்ரைம் குற்றங்களை செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறி மோசடி செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த மேற்கு வங்க மாநிலம் சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் உள்ள குற்ற விசாரணை துறை, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளது.
தீவிர தொழில்நுட்ப பகுப்பாய்வுக்கு பிறகு, இவர்கள் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர், 12 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.