“ஜம்மு காஷ்மீரில் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை” – மத்திய இணை அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக உயிரிழந்து வரும் ராணுவ வீரர்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் பேசும்போது, தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை, மத்திய இணை உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். மேலும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

“ஜம்மு காஷ்மீரில், கடந்த சில நாட்களாக, 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், நமது நாட்டை சேர்ந்த சில ராணுவ வீரர்களும், இந்த தாக்குதலின்போது வீர மரணம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளை காட்டிலும், குறைவான அளவில் தான் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்” என்று, நித்யானந்த் ராய் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “2023-ஆம் ஆண்டில், 2 கோடியே 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள், ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அமைதி அங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதால் தான், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது” என்று கூறினார்.

தீவிரவாதத்தின் மீது மத்திய அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்து பேசிய அவர், “தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளும் தன்மை பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை. நாங்கள் இந்த தீவிரவாதத்தை முழுவதுமாக அழித்து எடுத்து விடுவோம்.

2004-ல் இருந்து 2014-ஆம் ஆண்டு வரையில், ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 819 ஆக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், 941 பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளனர். இது இந்த 10 ஆண்டுகளில், 66 சதவீதமாக குறைந்திருக்கிறது” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News