ஆந்திராவில் உள்ள குடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கணேசன். இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவருக்கும் இடையே, தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், கணவர் ஊரில் இல்லை என்று கூறி, கடந்த 17-ஆம் தேதி அன்று, கிருஷ்ண கணேசனை காதலி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு தனிமையில் இருந்து இருந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மட்டுமின்றி, வேறு சில பெண்களிடமும், கிருஷ்ண கணேசன் பழகி வந்தது, அந்த பெண்ணிற்கு அப்போது தெரியவந்தது.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்த பிளேடால், பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இதனால் அலறித்துடித்த கிருஷ்ண கணேசனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.