கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, இரண்டு பேருந்து, சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஜி இன்டர் கல்லூரியில் இருந்து கிளம்பியுள்ளது. காலாவதியான தர சான்றிதழை வைத்திருந்ததால், இந்த பள்ளி வாகனங்களை, மண்டல உதவி போக்குவரத்து அதிகாரி பறிமுதல் செய்தார்.
மேலும், அந்த குழந்தைகளோடு, 2 பேருந்துகளையும் அவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக, குழந்தைகள் காவல்நிலையத்தில் இருந்த பேருந்திலேயே கிடந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பள்ளிகளின் பேருந்து தரத்தை ஆய்வு செய்வதற்கு, தொழில்நுட்ப மண்டல ஆய்வாளர் குலாப் சந்திரா அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டதால், ஆய்வு செய்யாமல் இருந்துள்ளார்.
இதன் விளைவாக, இரண்டு பேருந்துகளுக்கும் தர சான்றிதழ் கிடைப்பதல் தாமதம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பேருந்தில் இருந்ததால், இச்சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை, அம்மாநிலத்தில் ஏற்படுத்தியிருந்தது.
இதனை அறிந்த அம்மாநில அரசு, அதிரடி உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. அதாவது, அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பேருந்துக்கு, தர சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால்,
மண்டல தொழில்நுட்ப ஆய்வாளரை, உத்தரபிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், துணை மண்டல போக்குவரத்து அதிகாரி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.