மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் நிதி ஆயோக் (தேசிய கொள்கை குழு) அமைக்கப்பட்டது. தேசிய வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9-ஆவது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் (ஜூலை 27) நடைபெறவிருக்கிறது.
இக்குழு, அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.