அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு, பொங்கல் தினம் அன்று, குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகிவிடும் என்று படக்குழு அறிவித்தன.
இந்நிலையில், அஜித்தின் 64-வது படம் குறித்து தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த தகவலின்படி, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், அஜித் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், அந்த தகவல் அனைத்தும் வதந்தி தான் என்றும், அஜித்தும், பிரசாந்த் நீலும், மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தனர் என்றும், தற்போது தகவல் பரவி வருகிறது. இதனால் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.