ப்ளாக் ஷீப் என்ற Youtube சேனல் மூலமாக, ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சீரிஸில், பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் பிரிகிடா.
இந்த சீரிஸ்-க்கு பிறகு, மாஸ்டர், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில், சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்குடன், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மையாலுமே இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்களா? அல்லது திரைப்படத்தில் கணவன் மனைவியாக நடிக்கிறார்களா? அல்லது விளம்பரப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என்று, நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.