சமந்தாவிற்கு புதிய காதல்? அவரே வெளியிட்ட புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் இவர் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை சமந்தா புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வரும் ஒன்றாம் தேதி அன்று காதலரை கண்டுபிடிப்பீர்கள் என்ற வாசகத்துடன் உள்ள Fortune Cookie-யின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், மீண்டும் இன்னொரு நபருடன், சமந்தா காதலில் விழுந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவருடைய படத்திற்கான புரமோஷன் என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, சிட்டாடல் தொடரின் இந்திய வெர்ஷனில், சமந்தா நடித்து முடித்துள்ளார். இந்த தொடர், வரும் 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இதனை மறைமுகமாக கூறும் வகையில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஆனால், வழக்கம் போல் நெட்டிசன்கள் பலரும், தங்களது கற்பனை குதிரையை இங்கும் ஓடவிட்டுள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

RELATED ARTICLES

Recent News