கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, குழந்தைகளை மகிழ்விக்க புதுச்சேரியில் சாக்லேட் கடையில்
அமைக்கப்பட்டுள்ள 400 கிலோ எடையில் சாக்லேட் பூதம் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் மிஷன் வீதியில் சூக்கா சாக்லேட் என்ற கடையை ஸ்ரீநாத் பாலசந்தர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஒட்டி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சாக்லேட் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அப்துல் கலாம், ரஜினிகாந்த், பாரதியார், பாடகர் SPB போன்ற சிலைகள் உருவாக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பு விதமாக இங்கு சாக்லேட் பூதம் உருவாக்கப்பட்டுள்ளது.
அலாவுதீன் கார்ட்டூன் கதாபாத்திரத்தில் விளக்கை தேய்த்தால், வரும் ஜீனி பூதம் குழந்தைகள் மத்தியில் மிக பிரபலம். இதனை நினைவு கூறும் விதமாக குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக, ‘சூக்கா’ சாக்லேட் ஷாப்’பில் பூதம் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
182 மணி நேரத்தில் 400 கிலோ டார்க் சாக்லேட்டில், 5.5 அடி உயரம் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் தங்க காசுகளும், மற்றொரு கையில் விளக்கும் ஏந்தியபடி உள்ள பூதம்
சிலையை ‘ஷெப்’ ராஜேந்திரன் தங்கராசு உருவாக்கி உள்ளார்.
முழுக்க முழுக்க வெளிநாட்டு ‘டார்க் சாக்லேட்டால் செய்யப்பட்ட இந்த சிலை நேற்று முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை ஜனவரி முதல் வாரம் வரை பார்வையிடலாம் என விற்பனை மேலாளர் சந்தோஷ் குமார் கூறினார்.
புதுச்சேரியில் 400 கிலோ சாக்லேட்டில் பூதம் சிலை..!#Puducherry #chocolatestatue #news pic.twitter.com/sScy1iqHrO
— Raj News Tamil (@rajnewstamil) December 21, 2022