ஓடும் ரயிலில் சாகசம் : கால், கையை பறிகொடுத்த இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் பர்ஹத் ஆசம் ஷேக். இவர் சமூக வலைதளங்களில் லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான சாகசங்களை செய்து அதை வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்.

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி நடைமேடையை கால்களால் தேய்த்தும் அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பர்ஹத் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றுள்ளனர். அங்கு அந்த இளைஞர் ஒரு கை, ஒரு காலை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்துள்ளார்.

அவரிடம் விசாரித்த போது கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கியதாகவும், இதில் ஒரு கால், ஒரு கையை இழந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் வைரலான அந்த வீடியோ மார்ச் மாதம் 7-ம் தேதி சேவ்ரி ரெயில் நிலையத்தில் சாகசம் செய்தபோது எடுத்ததாகவும், கடந்த 14-ம் தேதி சமூக வலைத்தளத்தில் அப்லோடு செய்யப்பட்டதாகவும் கூறி உள்ளார்.

RELATED ARTICLES

Recent News