வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 67-ஆக அதிகரிப்பு!

கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்து கனமழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக 70 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News