வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் விக்ரம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News