ஹிமாசல் பிரதேசத்தில் மேக வெடிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 46 பேர்!

ஹிமாசல் பிரதேசத்தில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் 46 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சிம்லா மாவட்டம், ராம்பூர் அருகே சமேஜ் காட் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 36 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் 10 பேர் மாயமாகியுள்ளனர். அதில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News