கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இளம்பெண்ணை நிர்வாணமாகி திருநங்கைகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரா நகர் பேருந்து நிலையத்தில் சுற்றி தெரியும் திருநங்கைகள் அங்கு வரும் பயணிகளிடம் இருந்து பணம் வாங்கி பிழைப்பு நடத்து வருகின்றனர்.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் திருநங்கை வேடத்தில் பயணிகளிடம் பணம் கேட்டு பெற்றுள்ளார்.
இதை அறிந்த 7 திருநங்கைகள் இளம்பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து, சுற்றி வளைத்து கண்முடித்தனமாக தாக்கியதுடன், அந்த இளம்பெண் அணிந்திருந்த சட்டை பேண்ட் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி, உடல் உறுப்பில் மிளகாய் பொடி போட்டு பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக கண்முடித்தனமாக தாக்கியுள்ளனர்.
அந்த இளம்பெண் திருநங்கைகளிடம் கெஞ்சி விடாமல் அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஆனால் இதை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தார்கள் தவிர தடுக்க முன்வரவில்லை.
மேலும் பயணியர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.