கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட மக்களை நவீன கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து தேடும் பணி 5-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 346-ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.