வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 357-ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் வாழும் மக்கள் மண்ணில் புதையுண்டனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட மக்களை நவீன கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து தேடும் பணி 6-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது.

RELATED ARTICLES

Recent News