ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கீர்த்தி சுரேஷ்.
பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது 69-வது பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு, மிகவும் கவர்ச்சியான உடை அணிந்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.