கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு குறித்து பாஜகவை சேர்ந்த ராஜஸ்தானின் முன்னாள் எம்.எல்.ஏ கியான்தேவ் அஹுஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பசுவதை நடைபெறும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதை 2018-ம் ஆண்டு முதல் நாங்கள் கவனித்து வருகிறோம். கேரளாவில் பசுவதை நிறுத்தப்படாவிட்டால் கேரளாவில் இதுபோன்ற அவலங்கள் தொடரும்.
அதேசமயம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும், அங்கெல்லாம் இப்படியான அளவிலான பேரழிவுகளை அவை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.