மத்திய பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷாபூரில் உள்ள ஹர்தவுல் பாபா கோவில் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்புப் பணியை போலீஸார் மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News