மும்பை பங்குச்சந்தை எண்ணான சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 1481 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 437 புள்ளிகள் வீழ்ச்சியந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்று இந்த வாரத்திற்கான பங்குச்சந்தை காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தைகள்.
பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வருவது மற்றும் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த அளவில் இந்திய நிறுவனங்கள் லாபம் ஈட்டாமல் இருந்தது மற்றும் அமெரிக்காவில் வேலையில்லா விகிதம் 4.3% அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.