லாரியில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவின் பல்நாடு பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்த முயன்ற பாண்டிச்சேரியை சேர்ந்த ஓட்டுநர் திவாகர் என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ராஜமகேந்திரவரம் நகர போலீசார் (அக்.4) நேற்று திவான் செருவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியுடன் அதில் இருந்த 443 கிலோ கஞ்சாவை கைப்பற்றி பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த ஓட்டுநர் திவாகரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.