முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்பே மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற வீரராக விளங்கியவர் கிரஹம் தோர்பே. 1993-ஆம் ஆண்டு அன்று, தனது 24 வயதில், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், முதல் போட்டியிலேயே 114 ரன்கள் அடித்து அசத்தினார்.

1993-ஆம் ஆண்டில் இருந்து 2005-ஆம் ஆண்டு வரை, இங்கிலாந்து நாட்டிற்காக, 100 டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். மேலும், இதே காலங்களில், 82 ஒருநாள் போட்டிகளிலும், இவர் விளையாடி இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில், 6 ஆயிரத்து 744 ரன்களை எடுத்துள்ள கிரஹம், மொத்தமாக 16 சதங்களை அடித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த கிரஹம், தற்போது அவரது ரசிகர்களை மிகுந்த துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுள்ளார்.

அதாவது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்பே தனது 55-வது வயதில் காலமானார் என்று அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News